நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதிலும் இருந்து ஏறக்குறைய 120 அரசு சாரா அமைப்புகள், 2500 முக்மின் அமைப்பின் நண்பர்களின் ஏகோபித்த ஆதரவுடன் முக்மின் அமைப்பின் தலைவராக டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தேர்வு; நாட்டின் வலுவான குரலாக ஒலிக்கும்: மிம்காய்ன் தலைவர் டத்தோ அப்துல் ஹமீத் வாழ்த்து

கோலாலம்பூர்:

முக்மின் அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவராக டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தேர்வு செய்யப்பட்டதற்கு மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தகர் சபையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதன் தலைவர் டத்தோ அப்துல் ஹமீத் கூறினார்.

நாடு முழுவதிலும் இருந்து ஏறக்குறைய 120 அமைப்புகள், 2500 முக்மின் அமைப்பின் நண்பர்கள், 15 ஆலோசகர்கள், 60 செயற்குழு உறுப்பினர்கள் என்று பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் நானும் மிம்காய்ன் உறுப்பினர்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க அந்த கூட்டத்தில் சமுதாயத்தின் அனைத்து தலைவர்களும் ஒன்றுகூடி இருந்தது மிகப்பெரிய எழுச்சியை தந்தது.

மிம்காய்ன் செயலாளராக இருந்து அவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகள் பலவற்றை கூறலாம். நம் சமூகத்தின் வர்த்தகர்களை அவர் ஒன்று திரட்டி மிகபெரும் நிகழ்ச்சிகளை நாட்டின் முக்கிய தலைவர்களை தருவித்து நடத்திக்காட்டியது மறக்க முடியாத ஒன்று. 

மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு  அவரது நெடிய அனுபவத்தின் வாயிலாக பல்வேறு அனுகூலங்களை டத்தோ ஷாகுல் பெற்று தருவார். சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடுவார். அவரது குரல் நாட்டின் வலுவான குரலாக ஒலிக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன். அவரை தலைவராக தேர்வு செய்த முக்மின் உறுப்பினர்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துகள் 

இவ்வாறு டத்தோ பி வி அப்துல் ஹமீத் வெளியிட்ட வாழ்த்து  செய்தியில் கூறி உள்ளார். 

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset