செய்திகள் மலேசியா
“பணம் இல்லையென்றாலும் பல்கலைக்கழகக் கனவு தடைபடாது”: மாணவர்களுக்கு அமைச்சர் ஜம்ரிஉறுதி
கோலாலம்பூர்:
பொது பல்கலைக்கழகங்களில் சேர அனுமதி பெற்ற எந்த மாணவரும், பொருளாதார நெருக்கடியால் பதிவு செய்ய முடியாமல் தடுக்கப்பட மாட்டார்கள் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ சாம்ப்ரி அப்துல் காதிர் உறுதியளித்துள்ளார்.
“பணம் இல்லாததால் யாரும் பல்கலைக்கழகத்தில் சேர்வதிலிருந்து தடுக்கப்பட்டதில்லை. பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம்; நாங்களும் ஒருகாலத்தில் இதே சிரமங்களைச் சந்தித்திருக்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.
B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் முற்றாக மறுத்தார்.
மாணவர்களின் ஆரம்பக் கல்விச் செலவுகளைக் குறைக்கும் வகையில், தேசிய உயர்கல்வி நிதி நிறுவனம் (PTPTN) மூலம் 1,500 ரிங்கிட் மதிப்பிலான ‘Wang Pendahuluan Pinjaman (WPP)’ உதவித் தொகை வழங்கப்படுவதாகவும், அதோடு நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் வசதியுடன் கல்விக் கடன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், அதிகரித்து வரும் தங்குமிடச் செலவுகளைச் சமாளிக்க, மானிய வாடகையுடன் கூடிய மாணவர் விடுதிகள், ‘டாப்பூர் சிஸ்வா’ (Dapur Siswa) திட்டம், தேவையுள்ள மாணவர்களுக்கான உணவு உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
இதனுடன், சமீபத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்த 100 ரிங்கிட் மதிப்பிலான மடானி புத்தக வவுச்சர் திட்டமும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கும் பயனளிக்கவுள்ளது.
“பொருளாதார பின்னடைவு கல்விக்குத் தடையாக மாறக் கூடாது” என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், மாணவர் நலனுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கே.பி.டி தெரிவித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 1, 2026, 10:34 pm
ஜொகூர் மாநில தேர்தலை எதிர்கொள்ள தேசியக் கூட்டணி தயார்: அஹ்மத் சம்சுரி
June 1, 2026, 5:35 pm
ஜொகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது; அடுத்த 60 நாட்களில் தேர்தல்: மந்திரி புசார் அறிவிப்பு
June 1, 2026, 5:34 pm
ஐந்து வாகனங்கள் மோதிய கோர விபத்து: 4 பேர் பலி
June 1, 2026, 4:30 pm
இணைய பகுதிநேர வேலை மோசடி: குறுகிய கால லாபத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த நபர்
June 1, 2026, 3:26 pm
