செய்திகள் மலேசியா
ஜொகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது; அடுத்த 60 நாட்களில் தேர்தல்: மந்திரி புசார் அறிவிப்பு
ஜொகூர்பாரு:
16ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் ஜொகூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறது.
மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் மந்திரி புசார் ஓன் ஹபிஸ் காஸி இதனை அறிவித்தார்.
ஜொகூர் மக்களுக்கு ஒரு நிலையான, வலுவான அரசாங்கம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதனிடையே இன்றைய அறிவிப்பு, பல வாரங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
கடந்த 2022இல் நடந்த மாநிலத் தேர்தலில் 56 இடங்களில் 40 இடங்களை வென்று தேசிய முன்னணி மாநில அரசை அமைத்திருந்தது.
நம்பிக்கை கூட்டணி 12 இடங்களையும், தேசியக் கூட்டணி மூன்று இடங்களையும், மூடா ஒரு இடத்தையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2026, 10:34 pm
ஜொகூர் மாநில தேர்தலை எதிர்கொள்ள தேசியக் கூட்டணி தயார்: அஹ்மத் சம்சுரி
June 1, 2026, 5:34 pm
ஐந்து வாகனங்கள் மோதிய கோர விபத்து: 4 பேர் பலி
June 1, 2026, 5:21 pm
“பணம் இல்லையென்றாலும் பல்கலைக்கழகக் கனவு தடைபடாது”: மாணவர்களுக்கு அமைச்சர் ஜம்ரிஉறுதி
June 1, 2026, 4:30 pm
இணைய பகுதிநேர வேலை மோசடி: குறுகிய கால லாபத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த நபர்
June 1, 2026, 3:26 pm
