செய்திகள் விளையாட்டு
2030 உலகக் கிண்ண போட்டியிலும் ரொனால்டோவால் விளையாட முடியும்: நிர்வாகி
லிஸ்பன்:
2030 உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் திறனை யாரும் சந்தேகிக்கக் கூடாது.
போர்த்துகல் நிர்வாகி ரோபர்டோ மார்டினெஸ் இதனை வலியுறுத்தினார்.
ஸ்பெயின், மொராக்கோவுடன் இணைந்து போர்த்துகல் 2030 உலகக் கிண்ண போட்டியை நடத்தும் போது ரொனால்டோவுக்கு 45 வயதாகியிருக்கும்.
ஆனாலும் அந்தப் புகழ்பெற்ற முன்கள வீரரால் அப்போதும் போட்டித்தன்மையுடன் இருக்க முடியும்.
அதை யாரும் சந்தேகிக்கக் கூடாது. அவர் அதை நிரூபித்துவிட்டார்.
கடேனா செர் வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியில் மார்டினெஸ் இவ்வாறு கூறினார்.
முன்னதாக ரொனால்டோ தனது 18ஆவது வயதில், ஆகஸ்ட் 2003இல் போர்த்துகல் அணிக்காக அறிமுகமானார்.
தற்போது அவர் அந்நாட்டின் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகவும், அதிக கோல் அடித்தவராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2026, 12:50 pm
சிந்து புகழ்ந்த மலேசிய இளம் நட்சத்திரம் ஆரோன் தாய்: சர்வதேச அரங்கில் அதிரடி கவனம்
May 29, 2026, 10:02 am
மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய துணைத் தலைவராக டாக்டர் உதயகுமார் வெற்றி
May 29, 2026, 9:54 am
உலகக் கிண்ண போட்டிக்கான அமெரிக்க விசாக்களுக்காக ஈரான் இன்னும் காத்திருக்கிறது
May 29, 2026, 9:49 am
உலகக் கிண்ண போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு மெஸ்ஸி தலைமையேற்பார்
May 28, 2026, 10:19 am
பிரேசில் அணிக்கு அதிர்ச்சி: நெய்மரின் காயம் உலகக் கோப்பை கனவுக்கு பெரும் அச்சுறுத்தலா?
May 27, 2026, 6:02 pm
