செய்திகள் விளையாட்டு
மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய துணைத் தலைவராக டாக்டர் உதயகுமார் வெற்றி
கிள்ளான்:
மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய பேராளர் மாநாடு நேற்று கிள்ளான் செந்தோசாவில் மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்றது.
16 மாநிலங்களில் இருந்து 80 பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இம் முறை தேர்தல் ஆண்டு என்பதால் ஆண்டு பொதுக்கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது. இரண்டு அணிகள் களம் கண்டன.
நடப்பு தலைவர் டாக்டர் எம்.சுரேஸ் மீண்டும் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள போட்டியிட்டார்.
இவருக்கு 43 வாக்குகள் கிடைத்த வேளையில் எதிர்த்து போட்டியிட்ட ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த சிவன் கிருஷ்ணனுக்கு 37 வாக்குகள் கிடைத்தன.
துணை தலைவர் பதவிக்கு விலாயா மாநில சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.டி. உதயகுமார் போட்டியிட்டார். அவருக்கு 43 வாக்குகள் கிடைத்தன.
எதிர்த்து போட்டியிட்ட ரகுபதிக்கு 37 வாக்குகள் கிடைத்தன.
கடந்த தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்ட டாக்டர் ஆர்.டி. உதயகுமார் இம்முறை வெற்றி பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
நான்கு உதவித் தலைவர்கள் பதவிக்கு மொத்தம் எட்டு பேர் போட்டியிட்டனர்.
இதில் தனபாலன், சுப்பிரமணியம், கமலநாதன், விஜய சேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தியாகராஜன், காமினி, லோகநாதன், அருனிஸ்ராவ், வசந்தகுமார், திலகராஜன், ஜெகன், விக்னேஸ்வரி, விஜேந்திரன் ஆகியோர் 9 உச்சமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இரு அணிகள் சார்பில் வேட்பாளர்கள் சமமாக வெற்றி பெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2026, 12:50 pm
சிந்து புகழ்ந்த மலேசிய இளம் நட்சத்திரம் ஆரோன் தாய்: சர்வதேச அரங்கில் அதிரடி கவனம்
May 29, 2026, 9:54 am
உலகக் கிண்ண போட்டிக்கான அமெரிக்க விசாக்களுக்காக ஈரான் இன்னும் காத்திருக்கிறது
May 29, 2026, 9:49 am
உலகக் கிண்ண போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு மெஸ்ஸி தலைமையேற்பார்
May 28, 2026, 10:19 am
பிரேசில் அணிக்கு அதிர்ச்சி: நெய்மரின் காயம் உலகக் கோப்பை கனவுக்கு பெரும் அச்சுறுத்தலா?
May 27, 2026, 6:02 pm
டாங் ஜீ-ஈ வேய், பாங் ரான்-பெய் ஜிங்கின் கனவை முறியடித்தனர்
May 27, 2026, 9:56 am
மெஸ்ஸிக்குக் காயம்: உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவாரா?
May 27, 2026, 9:55 am
தொடர்ந்து நான்காவது ஆண்டாகச் சாதனை: அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டாளர் ரொனால்டோ
May 26, 2026, 12:29 pm
