செய்திகள் விளையாட்டு
ஒரு பெரிய ஜாம்பவான் இருப்பது, அர்ஜெண்டினாவால் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு உத்தரவாதம் அல்ல: பெர்டோனி
பியூனஸ் அயர்ஸ்:
நடப்பு உலகக் கிண்ண சாம்பியனான அர்ஜெண்டினா, தங்களது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் திறன் கொண்டிருப்பதாக அதன் ஜாம்பவான் டேனியல் பெர்டோனி நம்புகிறார்.
ஆனால், 2022 உலகக் கிண்ணத்தை வென்ற வீரர்களை அதிகமாகச் சார்ந்திருக்க வேண்டாம்.
அந்த அணுகுமுறை அணியின் வெற்றி வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்று பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியை அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும் இந்தத் தொடருக்கான அணியில், 2022 உலகக் கிண்ணத்தை வென்ற அணியைச் சேர்ந்த 16 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் அர்ஜெண்டினா அணி மீண்டும் கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸியைச் சார்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, அவற்றில் மூன்றில் வெற்றி பெற்ற எங்கள் சாதனையின் அடிப்படையில், அர்ஜெண்டினா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக நான் கருதுகிறேன்.
ஆனால் அணியில் உள்ள பெரிய நட்சத்திர வீரர்களையும் கடந்தகால சாதனைகளையும் மட்டும் வைத்துக்கொண்டு, மீண்டும் வெற்றி பெற முடியும் என்று நாம் நம்பினால், அது ஒரு தவறு என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 9:46 am
2030 உலகக் கிண்ண போட்டியிலும் ரொனால்டோவால் விளையாட முடியும்: நிர்வாகி
May 29, 2026, 12:50 pm
சிந்து புகழ்ந்த மலேசிய இளம் நட்சத்திரம் ஆரோன் தாய்: சர்வதேச அரங்கில் அதிரடி கவனம்
May 29, 2026, 10:02 am
மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய துணைத் தலைவராக டாக்டர் உதயகுமார் வெற்றி
May 29, 2026, 9:54 am
உலகக் கிண்ண போட்டிக்கான அமெரிக்க விசாக்களுக்காக ஈரான் இன்னும் காத்திருக்கிறது
May 29, 2026, 9:49 am
உலகக் கிண்ண போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு மெஸ்ஸி தலைமையேற்பார்
May 28, 2026, 10:19 am
பிரேசில் அணிக்கு அதிர்ச்சி: நெய்மரின் காயம் உலகக் கோப்பை கனவுக்கு பெரும் அச்சுறுத்தலா?
May 27, 2026, 6:02 pm
