செய்திகள் இந்தியா
2026 ஆம் ஆண்டில் 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான பருவமழையை இந்தியா எதிர்பார்க்கிறது
மும்பை:
எல் நினோ நிகழ்வின் தாக்கம் காரணமாக, 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த மழைப்பொழிவை இந்தியா பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது, பயிர் உற்பத்தி, உணவு விலைகள், ஈரான் போர் காரணமாக பணவீக்க அழுத்தத்தை ஏற்கனவே எதிர்கொண்டிருக்கும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் கவலையை எழுப்பியுள்ளது.
கிட்டத்தட்ட AS$4 டிரில்லியன் மதிப்புள்ள அந்தப் பொருளாதாரத்தில் முக்கியமான நீர் ஆதார விநியோகத்தை நிரப்புவதற்காக, வருடாந்திர மழைப்பொழிவில் சுமார் 70 சதவீதம் பருவமழை பங்களிக்கிறது. கிட்டத்தட்ட பாதி விவசாய நிலங்களில் இன்னும் நீர்ப்பாசன அமைப்புகள் இல்லை. அதே சமயம், மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிப் பேர் வருமான ஆதாரமாக விவசாயத் துறையை நம்பியுள்ளனர்.
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கௌரா செங்குப்தா, குறைந்த மழை, சீரற்ற விநியோகத்திற்கான வாய்ப்புகள், பணவீக்க அபாயத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
"ஒரு பலவீனமான பருவமழை, குறிப்பாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், அழுத்தத்தை அதிகரிக்கும். உணவுப் பணவீக்கம் அதிகரித்தால், அது பணவீக்கத்தை சராசரியாக 5.5 சதவீதத்திற்கு அருகில் கொண்டு செல்லும்" என்றார் அவர்.
இந்திய அறிவியல் புவி அமைச்சின் செயலாளர் எம். ரவிச்சந்திரன், இந்த ஆண்டு பருவமழை நீண்ட கால சராசரியில் 90 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த ஏப்ரலில் கணிக்கப்பட்ட 92 சதவீதத்தை விட குறைவாகும்.
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே பலவீனமான பருவமழையாக இருக்கும் என்றார் அவர். அப்போது, எல் நினோ நிகழ்வு மழைப்பொழிவை 87 சதவீதமாகக் குறைத்தது.
எல் நினோ விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அது மழைப்பொழிவைப் பாதிக்கும் என்றும், அதன் வலிமை பருவமழையின் இரண்டாம் பாதியில் மிதமானது முதல் வலுவானது வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த ஜூன் மாதத்தில், இந்தியா சராசரிக்கும் குறைவான மழையைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட கால சராசரியில் 92 சதவீதத்திற்கும் குறைவாகும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
