செய்திகள் உலகம்
“அணு சக்தி” ஆற்றலைக் காட்டும் வடகொரியா: புதிய ஏவுகணை சோதனையால் உலக நாடுகள் பதற்றம்
பியோங்யாங்:
வடகொரியா மீண்டும் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புதிய இலகுரக பல்நோக்கு ஏவுகணை ஏவு அமைப்பையும், நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணை ஆயுத அமைப்பையும் வெற்றிகரமாக சோதித்ததாக அந்த நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் நேரில் கண்காணித்த இந்த சோதனை, நாட்டின் இராணுவ வலிமை மேலும் ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதை வெளிப்படுத்துவதாக சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சுமார் 80 கிலோமீட்டர் தூரம் பறந்த ஏவுகணைகள், நீண்ட தூர தாக்குதல் திறன், அதிநவீன வழிசெலுத்தல் தொழில்நுட்பத்துடன் சோதிக்கப்பட்டதாக KCNA தெரிவித்துள்ளது. குறிப்பாக 240 மில்லிமீட்டர் கட்டுப்படுத்தப்பட்ட பீரங்கி ராக்கெட்டுகளும் இந்த சோதனையில் இடம்பெற்றுள்ளன.
“இது வடகொரியாவின் இராணுவ சக்தி, பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய சின்னம்” என கிம் ஜாங்-உன் பெருமிதம் தெரிவித்துள்ளார். சோதனையின் வெற்றியில் அவர் முழு திருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வெளியான நிழல்படங்களில், அடர்ந்த புகைமூட்டத்துடன் நகரும் ஏவுதள வாகனங்களில் இருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்த காட்சிகள் வெளியாகி உலக கவனத்தை ஈர்த்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் கடுமையான தடைகள் நீடித்தாலும், வடகொரியா தொடர்ந்து ஏவுகணை, அணு ஆயுத தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவது, ஆசிய பிராந்திய பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.
37 நாட்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த சோதனை, இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா மேற்கொண்ட எட்டாவது ஏவுகணை பரிசோதனையாகும். இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
