செய்திகள் உலகம்
அமெரிக்கா-இஸ்ரேலின் புதிய தாக்குதல்கள் ஈரான், லெபனானில் போர் நிறுத்தத்தை அச்சுறுத்துகின்றன
தெஹ்ரான்:
வாஷிங்டன் போர் நிறுத்தத்தை மீறியதாக தெஹ்ரான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், நேற்றிரவு அமெரிக்க தாக்குதல்களைத் தொடர்ந்து, பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக அது எச்சரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள தெற்கு துறைமுக நகரான பந்தர் அப்பாஸில், இரவில் வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அதன் படைகள் அமெரிக்க ட்ரோன் ஒன்றை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியதாகவும், F-35 போர் விமானங்களை நோக்கிச் சுட்டதாகவும் தெரிவித்துள்ளது.
"போர் நிறுத்தம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து, சட்டவிரோத, ஆதாரமற்ற செயல்களைத் தொடரும் பயங்கரவாத அமெரிக்கப் படைகள்... கடந்த 48 மணி நேரத்தில், ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் போர் நிறுத்தத்தை கடுமையாக மீறியுள்ளன" என்று ஈரான் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
மேலும் விளக்கம் எதுவும் தராமல், எந்தவொரு தீய செயலையும் பதிலடி கொடுக்காமல் விட மாட்டோம் என்றும், ஈரானிய மக்களைப் பாதுகாப்பதில் தயங்க மாட்டோம் என்றும் அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹோகின்ஸ், இரவில் ஈரான் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல்களை அறிவித்தார்.
"ஈரானியப் படைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து எங்கள் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்கப் படைகள் இன்று தெற்கு ஈரானில் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின" என்று ஹோகின்ஸ் கூறினார்.
அவர் அந்தத் தாக்குதலை விவரிக்கவில்லை. இருப்பினும், ஏவுகணை ஏவுதளங்கள், கடற்படைச் சுரங்கங்களை வைக்க முயன்ற படகுகள் இலக்குகளில் அடங்கும் என்று மட்டும் தெரிவித்தார்.
அய்டிலாடா கொண்டாட்டங்களின் தொடக்கத்தை முன்னிட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமெனி, மேற்கு ஆசியாவில் வாஷிங்டன் அதன் செல்வாக்கை இழந்து வருவதாகக் கூறினார்.
தாக்குதல்களைத் தொடங்குவதற்கு அமெரிக்காவை அனுமதிக்கும் தளங்களை நிறுத்துமாறு பிராந்திய நாடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அவரது எழுத்துப்பூர்வ அறிக்கையின்படி, ஆக்கிரமிப்புகளைச் செய்வதற்கும், இராணுவத் தளங்களை நிறுவுவதற்கும், இப்பகுதியில் அமெரிக்காவிடம் இனி பாதுகாப்பான புகலிடங்கள் இல்லை. மேலும், அது நாளுக்கு நாள் அதன் முந்தைய நிலைகளிலிருந்து மேலும் விலகி வருகிறது.
அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் இருந்தபோதிலும், ஒரு அமைதி ஒப்பந்தம் இன்னும் சாத்தியம் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ செவ்வாய்க்கிழமை கூறினார். ஈரான் கட்டுப்படுத்த முயற்சிக்கும் முக்கிய எண்ணெய், எரிவாயு போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை, 'எப்படியும்' மீண்டும் திறக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
