நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழக முதல்வர் விஜய்யை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சந்திக்கிறார்

புத்ராஜெயா:

தமிழக முதல்வர் விஜய்யை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை வரும் செப்டம்பர் மாதம் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் இன்று தமிழக முதல்வர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இது குறித்து அவர் சமூக ஊடகங்களில் கூறியதாவது,

இன்று என் நண்பரும் முதலமைச்சருமான விஜய்யுடன் தொலைபேசியில் உரையாட வாய்ப்பு கிடைத்தது.

மேலும், தமிழக மக்கள் மீது அவர் தற்போது வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் தெரிவித்தேன்.

மேலும், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகவும் நான் செப்டம்பர் மாதம் இந்தியா செல்லவுள்ளேன்.

அப்பொது வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்திற்கு ஒரு குறுகிய பயணம் மேற்கொள்வேன் என அவரிடம் கூறினேன்.

மக்களின் நலனுக்காகவும், தமிழகத்தின் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காகவும், முதலமைச்சர் விஜய் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்தவும் ஆளவும் தேவையான வலிமையையும்  பெறட்டும் என்று தாம் வாழ்த்தியதாக பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset