நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சனாதன தர்மத்திற்கு எதிரான உதயநிதியின் பேச்சு; பிரதமர் மோடி, முதல்வர் விஜய்க்கு கண்டன கடிதம் வழங்கப்படும்: டான்ஸ்ரீ நடராஜா

கோலாலம்பூர்:

சனாதன தர்மத்திற்கு எதிராக உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய்க்கு கண்டன கடிதம் வழங்கப்படும்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இதனை கூறினார்.

சனாதன தர்மம் குறித்து தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு மலேசியாவில் உள்ல இந்து அமைப்புகள் பல ஒன்றிணைந்து கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இது தொடர்பான கண்டனக் கூட்டம் பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய டான்ஸ்ரீ நடராஜா, இதுபோன்ற மத உணர்வுகளை புண்படுத்தும் பேச்சுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

சனாதன தர்மம் என்பது நிலையானதும் அழிவற்றதுமான உயர்ந்த ஆன்மீக வழிமுறையாகும்.

கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் வாழ்வியலையும் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீக அடையாளம்.

அதனை இழிவுபடுத்தும் எந்தவொரு கருத்தும் சமூக ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கண்டன கடிதம் ஒன்றை இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோரிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத சுதந்திரம் அனைவருக்கும் உரிமை என்றாலும், பிறரின் நம்பிக்கைகளை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இத்தகைய பிரச்சாரங்களை எதிர்த்து ஆன்மீக அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என டான்ஸ்ரீ நடராஜா வலியுறுத்தினார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இந்துக்கள் இந்த தர்மத்தை பின்பற்றி வருகின்றனர். உலகெங்கும் உள்ள இந்துக் கோயில்கள் சனாதன தர்மத்தின் வேர்களாக விளங்குகின்றன.

தனிமனித வாழ்வின் பழக்க வழக்கங்களில் கூட அதன் தாக்கம் தெளிவாகக் காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசியல் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை எதிர்த்து கூறிய கருத்துக்கள் இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset