செய்திகள் மலேசியா
இந்தியர்களுக்கான தெக்குன் கடனுதவியை 250,000 ரிங்கிட்டாக உயர்த்தும் கோரிக்கை; பிரதமரின் கவனத்திற்கு மைக்கி கொண்டு செல்லும்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
சிரம்பான்:
இந்தியர்களுக்கான தெக்குன் கடனுதவியை 250,000 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை பிரதமரின் கவனத்திற்கு மைக்கி கொண்டு செல்லும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் 38ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தலைவர் திருநாவுக்கரசு தலைமையிலான இச்சங்கத்தின் கூட்டத்தை தொடக்கி வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
காரணம் நெகிரி செம்பிலானில் உள்ள இந்திய வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை இச்சங்கம் மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் வரும் ஜூன் 5ஆம் தேதி முத்ரா விளக்கக் கூட்டத்தையும் அச்சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு முத்ரா திட்டத்தின் கீழ் 220 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தை இந்திய சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் இலக்காக உள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக உரையாற்றிய சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு, இந்தியர்களுக்கு தெக்குன் கடனுதவி ஆக அதிகமாக 100,000 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
இதை 250,000 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும். தற்போது பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.
அவரின் கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்றாகும்.
ஆக இக்கோரிக்கையை பிரதமரின் கவனத்திற்கு மைக்கி கொண்டு செல்லும் என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2026, 10:43 pm
தமிழக முதல்வர் விஜய்யை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சந்திக்கிறார்
May 22, 2026, 10:42 pm
தொழிலாளர் பாதுகாப்பு: இந்தோனேசிய அமைச்சருடன் டத்தோஸ்ரீ ரமணன் இருதரப்பு பேச்சுவார்த்தை
May 22, 2026, 6:18 pm
மூன்று ஆடவர்கள் கொலைக் குற்றச்சாட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்
May 22, 2026, 6:04 pm
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிறைக்கைதிகளைச் சந்திக்க குடும்பங்களுக்கு அனுமதி: சிறைத்துறை
May 22, 2026, 5:07 pm
