நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முத்ரா திட்டத்தில் 20 மில்லியன் ரிங்கிட்டை நெகிரி இந்திய வர்த்தகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்: திருநாவுக்கரசு

சிரம்பான்:

முத்ரா திட்டத்தில் 20 மில்லியன் ரிங்கிட்டை  நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

இதை இலக்காக கொண்டு நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம் செயல்படும் என்று அதன் தலைவர் திருநாவுக்கரசு கூறினார்.

நெகிரி செம்பிலானில் இந்திய வர்த்தகர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சங்கம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5.2 மில்லியன் ரிங்கிட் தெக்குன் கடனுதவியை இங்கு வர்த்தகர்களுக்கு சங்கம் கொண்டு சேர்த்துள்ளது.

இதன் மூலம் வர்த்தகர்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுப்படுத்தி கொண்டனர்.

வர்த்தகத்தில் ஒருவரை நாம் உருவாக்கி விட முடியாது. ஆனால் இதுபோன்ற உதவிகளின் வாயிலாக அவர்களை தூக்கி விட முடியும்.

இதை அடிப்படையாக கொண்டே நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கம்  செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு முத்ரா திட்டத்தின் கீழ் 220 மில்லியன் ரிங்கிட்டை  ஒதுக்கியுள்ளது.
முத்ரா என்பது இந்திய தொழில்முனைவோர் மூலதனம், பொருளாதார ஊக்குவிப்பு திட்டமாகும்.

தெக்குன் நேஷனல் 120 மில்லியன் ரிங்கிட், பேங்க ரக்யாத் 15 மில்லியன் ரிங்கிட், எஸ்எம்இ பேங்க் 50 மில்லியன் ரிங்கிட், அமானா இக்தியார் 27 மில்லியன் ரிங்கிட், மலேசிய கூட்டுறவு ஆணையம் 11 மில்லியன் ரிங்கிட்  ஆகியவை இதில் அடங்கும்.

ஆக இத்திட்டத்தில் மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட்டை நெகிரி செம்பிலானில் உள்ள இந்திய வர்த்தகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 5ஆம் தேதி சிரம்பான் அன்சான் கிளானா ரிசோர்ட்டில் சிறப்பு விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இந்திய வர்த்தகர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து பயன் பெற வேண்டும்.

நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் 38ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசு இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset