நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசியப் பொருளாதாரம் நடப்பாண்டில் வேகமாக வளர்ச்சி காணும்: பொருளியல் மையம் கணிப்பு

கோலாலம்பூர்:

மலேசியப் பொருளாதாரம் நடப்பாண்டில் 5.2 விழுக்காடு அளவில் வளர்ச்சி காணும் என சமூக, பொருளியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.

முன்னதாக 2021ல், பொருளாதார வளர்ச்சி 3.4 விழுக்காடாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியது உள்ளிட்ட அம்சங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என அம்மையம் தெரிவித்துள்ளது.

அம்மையத்தின் செயல் இயக்குநர் லீ யெங் குய் (Lee Heng Guie) கூறுகையில், அரசாங்கம் முன்னறிவித்த வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் தங்கள் மையம் குறைவான விகிதத்தையே குறிப்பிட்டுள்ளது என்றார்.

மலேசிய அரசு 5.5% முதல் 6.5% வரையிலான பொருளியல் வளர்ச்சி சாத்தியமாகும் என எதிர்பார்க்கிறது.

"பண வீக்கம், வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்களால் சிக்கல் ஏற்படக்கூடும். மேலும் குடும்பங்கள் மீண்டும் தங்களது சேமிப்புகளை உயர்த்துவது, வரவு செலவுகளை முறைப்படுத்துவது ஆகியவற்றை தொடங்க வேண்டியிருக்கும்," என்றார் லீ யெங் குய்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset