நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹம்ஸாவிற்குப் பதிலாக சம்சூரியை எதிர்க்கட்சித் தலைவராக தேசியக் கூட்டணி நியமித்தது

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணி புதிய எதிர்க்கட்சித் தலைவராக தற்போதைய டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினுக்குப் பதிலாக, கெமாமன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தாரை நியமித்துள்ளது.

அஹ்மட் சம்சூரி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டணியின் உச்சக்கூட்டத்தில் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேசியக் கூட்டணி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் தெரிவித்தார்.

இருப்பினும் இந்த ஒப்பந்தம் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ டாக்டர் ஜொஹரி அப்துலுக்குத் தெரிவிக்கப்பட்டதா இல்லையா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க அஹ்மத் சம்சூரியை நியமிக்க கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அவர்  ஓர் அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset