நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிரியர்களின் பணியை மேலும் வலுப்படுத்த 12 முன்னெடுப்புகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது

ஈப்போ:

இந்த ஆண்டு நடைபெறும் 55ஆவது தேசிய ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆசிரியர்களின் பணியை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் 12 முன்னெடுப்புகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இலக்கவியல் கல்வியறிவில் கல்வியாளர்களின் தொழில்முறை மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில், கூகுள் சான்றளிக்கப்பட்ட கல்வியாளர் நிலை ஒன்று, நிலை இரண்டு சான்றிதழ் படிப்புகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் பட்லினா சிடேக் கூறினார்.

இந்த முயற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும்.

மேலும் ஜிசிஇ நிலை ஒன்றுக்கு ஒவ்வொரு ஆசிரியருக்கும் 40 ரிங்கிட், ஜிசிஇ நிலை இரண்டுக்கு 100 ரிங்கிட் செலவாகும் என்றும் அவர் கூறினார்.

கல்வியமைச்சு ஒரு சிறப்பு கூட்டாட்சி பயிற்சி விருதை வழங்குகிறது.

இது, மருத்துவமனைகளில் உள்ள பள்ளிகள், தற்காலிகப் பள்ளிகள், பி1, பி2, பி3 பகுதிகளில் உள்ள கிராமப்புறப் பள்ளிகள் போன்ற புரோஹாஸ் திட்டத்தின் கீழ் உள்ள தடைகளைக் கொண்ட பள்ளிகளில் கற்பிப்பதற்காகத் தியாகம் செய்ய முன்வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் அவர்களின் படிப்புகள் நாட்டில் கல்விக்கான அணுகலை அதிகரிக்க உதவும் என்பதற்காகவும், அவர்கள் முதுகலை, முனைவர் படிப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

ஈப்போவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கி வைக்கப்பட்ட தேசிய ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset