நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிரியர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள்: பிரதமர்

கோலாலம்பூர்:

ஆசிரியர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள். அவர்கள் தேசத்தின் ஒழுக்கங்களையும் நாகரிகத்தையும் வடிவமைக்கிறார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

உலக சவால்கள் மேலும்  சிக்கலாகி வருவதால், தார்மீக, ஆன்மீக வலிமை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு பெருகிய முறையில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆசிரியர்களின் பங்கு என்பது கல்வி கற்பிப்பது மட்டுமல்ல.

மடானியின் கொள்கைக்கு ஏற்ப, அறிவுக்கு மனித விழுமியங்களையும் ஞானத்தையும் ஊட்டுவதே ஆகும்.

மதிப்புகளும் நற்பண்புகளும் இல்லாமல், வளர்ச்சி என்பது திசை மாறிய முன்னேற்றத்தையே உருவாக்கும் என்று பிரதமர் தமது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தப் பதிவு வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டின் கருப்பொருள் ஆசிரியர்களே தேசத்தின் இதயம்  என்பதாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset