நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் காலிறுதிக்கு முன்னேறினர்

கோலாலம்பூர்: 

இன்று பாங்காக்கின் நிமிபுத்ர் அரங்கில், சீனாவின் ஹுவாங் டி-லியு யாங் ஜோடியை வீழ்த்தியதன் மூலம், நாட்டின் ஆடவர் இரட்டையர் கோ சீ ஃபெய்-நூர் இசூடின் ரும்சானி தாய்லாந்து ஓபனின் காலிறுதிக்குத் தங்கள் முன்னேற்றத்தைத் தொடர்ந்துள்ளனர்.

21-14, 24-22 என்ற நேர் செட் கணக்கில், 46 நிமிடங்களில் வெற்றியைப் பதிவுசெய்து, நம்பத்தகுந்த செயல்திறனை அவர்கள் வெளிப்படுத்தினர்.

சீ ஃபெய்-நூர் இசூடின், முதல் செட்டில் ஆக்ரோஷமாகத் தொடங்கி, விரைவான தாக்குதல் முறைகள் மூலம் ஆட்டத்தை ஆதிக்கம் செய்தனர். பின்னர், அந்தச் செட்டை வெற்றியுடன் முடித்தனர்.

இருப்பினும், இரண்டாவது செட் மிகவும் பதட்டமாக இருந்தது. எதிரிகள் மீண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர், மேலும் அவர்கள் ஆட்டத்தை மூன்றாவது செட்டிற்கு இழுத்துச் செல்லும் தருவாயில் இருந்தனர்.

இசூடின், ஆட்டத்தின் முடிவில் சிறிது கவனத்தை இழந்ததைத் தொடர்ந்து, தாங்கள் அழுத்தத்தை எதிர்கொண்டதாகக் கூறினார். 

அரையிறுதிக்கான டிக்கெட்டுக்காக, சீ ஃபெய்-இசூடின் நாளை ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் க்ரிம்லி-மேத்யூ க்ரிம்லி ஜோடியை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டின் மற்றொரு ஆடவர் இரட்டையர் ஜோடியான பிரையன் கூன்டிங்-முஹம்மத் ஹைக்கால் நஸ்ரி, இந்தியாவின் முதல் தேர்வு ஜோடியான சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டியிடம் 12-21, 19-21 என்ற கணக்கில், 44 நிமிடங்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்களின் பயணம் முடிவுக்கு வந்தது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset