செய்திகள் விளையாட்டு
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்
கோலாலம்பூர்:
நாட்டின் ஆடவர் இரட்டையர் கோ சீ ஃபெய்-நூர் இசூடின் ரும்சானி, இன்று பாங்காக்கின் நிமிபுத்ர் அரங்கில், ஜப்பானைச் சேர்ந்த ஹிரோகி ஒகாமுரா-கியோஹெய் யமஷிதா ஜோடியை வீழ்த்தியதன் மூலம், தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
நாட்டு ஜோடி, 21-15, 17-21, 21-12 என்ற கணக்கில், 56 நிமிடங்கள் நீடித்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன், கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
அந்த வெற்றி, சீ ஃபெய்-நூர் இசூடின் சூப்பர் 500 தரப் போட்டியின் சிறந்த 16 குழுவிற்குள் நுழைவதை உறுதி செய்தது.
நாட்டு ஜோடி, அதன்பின், சீனாவின் ஹுவாங் டி-லியு யாங் ஜோடியை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள், நாட்டு ஜோடி சலோம்போன் சரோயன்கிடமோர்ன்-வொராபோல் தோங்சா-ஙாவை 21-15, 21-8 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
இதற்கிடையில், நாட்டின் மற்றொரு ஆடவர் இரட்டையரான சோங் ஹோன் சியான்-வோங் வின் ஷான், தைவானின் லீ ஃபாங்-சிஹ்-லீ ஃபாங்-ஜென் ஜோடியிடம் 20-22, 26-24, 7-21 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறத் தவறினர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
June 5, 2026, 2:04 pm
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
June 5, 2026, 11:05 am
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
June 5, 2026, 11:04 am
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
June 4, 2026, 12:16 pm
உலகக் கிண்ணம்: ஆஸ்திரேலிய அணியில் மலேசியத் தமிழர்
June 4, 2026, 11:15 am
