நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில்  மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை அன்டோயின் செமென்யோ, ஓமர் மர்மோஷ், சவின்ஹோ ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் 77 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

அதே வேளையில் கிண்ணத்தை வெல்லவிருக்கும் அர்செனல் அணியினருக்கு அவ்வணியினர் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset