நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா சாம்பியன்

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று பார்சிலோனா அணியினர் சாதித்துள்ளனர்.

காம்ப் நவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் பார்சிலோனா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை மார்கஸ் ராஸ்போர்ட், பெரான் தோரஸ் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா அணியினர் 91 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தனர்.

அதே வேளையில் இந்த சீசனுக்கான லா லீகா கிண்ணத்தையும் பார்சிலோனா அணியினர் வென்றுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset