நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை அர்செனல் நெருங்கியுள்ளது

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை அர்செனல் அணியினர்  நெருங்கியுள்ளனர்.

லண்டன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் வெஸ்ட்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தில் 83ஆவது நிமிடத்தில் லியாண்ட்ரோ டுரோசார்ட் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 79 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

அதே வேளையில் இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தையும் அவ்வணியினர் நெருங்கியுள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் பெர்ன்லி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியுடன் சமநிலை கண்டனர்.

நாட்டிங்காம் போரஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset