செய்திகள் விளையாட்டு
ஈப்போவில் அனைத்துலக 22ஆவது ஒகினோவா கோஜு ரியோ கராத்தே போட்டி: இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது
ஈப்போ:
அனைத்துலக 22ஆவது ஒகினோவா கோஜு ரியோ கராத்தே போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது.
22ஆவது ஒகினோவா கோஜு ரியோ கராத்தே போட்டி இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை ஈப்போவில் நடைபெறுகிறது.
இதில் 10 நாடுகளில் இருந்து 1400 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
மலேசியா, இந்தியா, வங்காளதேசம், இந்தோனேசியா, சிங்கப்பூர், நேப்பாளம், இலங்கை, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகிஸ்தான், பிரான்ஸ் ஆகிய 10 நாடுகள் பங்கு பெற்றுள்ளனர்.
ஈப்போவில் உள்ள பேரா பூப்பந்து அரங்கில் நடைபெறும் இப்போட்டி மாநில கராத்தே சங்கத் தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் 6 வயது முதல் இளம் வயதுடையவர்கள வரை போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர் இப்போட்டியின் தொழில்நுட்ப துணைத் தலைவர் மாஸ்டர் எஸ். ஸ்டாலின் தெரிவித்தார்.
நாடறிந்த கராத்தே மாஸ்டர் கே. ஆனந்தன் தலைமையில் இயங்கக் கூடிய பேரா மாநில கராத்தே கழகமும் மலேசியா ஓகினோவா கராத்தே கழகமும் இணைந்து மாநில அரசாங்கத்தின் ஆதரவோடு இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவராக கண் மருத்துவ நிபுணர் டத்தோ டாக்டர் ஜஸ்விண்டர் சிங் பொறுப்பேற்றுள்ளா்.
முன்னதாக இப்போட்டியை தேசிய கராத்தே சங்கத்தின் டத்தோ வீரா நூர் அஸ்மி தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2026, 11:37 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
May 8, 2026, 11:17 am
44 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டத்தில் அஸ்டன் வில்லா
May 7, 2026, 5:44 pm
ஜீ ஜியா 2026 உலக பூப்பந்து சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறவில்லை
May 7, 2026, 9:37 am
உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட் விலைகளை இன்ஃபான்டினோ நியாயப்படுத்துகிறார்
May 7, 2026, 9:33 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் அர்செனல் - பிஎஸ்ஜி மோதல்
May 6, 2026, 9:20 am
உலகக் கிண்ண போட்டிக்கான பிபாவின் உத்தரவாதத்தை ஈரான் கோருகிறது
May 6, 2026, 9:16 am
