செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண போட்டிக்கான பிபாவின் உத்தரவாதத்தை ஈரான் கோருகிறது
டெஹ்ரான்:
2026 உலகக் கிண்ண போட்டியில் ஈரானின் பங்கேற்பு குறித்து விவாதிப்பதற்காக பிபா, ஈரான் கால்பந்து கூட்டமைப்பை சூரிச்சில் உள்ள தனது நிர்வாக அமைப்பின் தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
பிபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ வழங்கும் உத்தரவாதங்களைப் பொறுத்தே இப் போட்டியில் ஈரானின் பங்கேற்பு அமையும் என்று அதன் தலைவர் மெஹ்தி தாஜ் கூறினார்.
ஈரானிய அணி உலகக் கிண்ண போட்டியில் விளையாடியே ஆக வேண்டும் என நாங்கள் நம்புகிறோம் என்று தெஹ்ரானில் தாஜ் ஈரானிய அரசுத் தொலைக்காட்சியிடம் அவர் இவ்வாறு கூறினார்.
ஆனால், இன்பான்டினோவுடனான சந்திப்பின்போது அளிக்கப்படும் உத்தரவாதங்களைப் பொறுத்தே எங்கள் பங்கேற்பு அமையும்.
எங்கள் ஆயுதப் படைகளை, குறிப்பாக புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரை அவமதிப்பதற்கு
அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை.
அவர்கள் எங்கள் தலைவர்களையும் அவமதிக்க முடியாது.
இன்பான்டினோ அந்த உத்தரவாதத்தை அளித்தால், நாங்கள் உலகக் கிண்ண போட்டிக்கு செல்வோம்.
ஏதேனும் அவமதிப்பு ஏற்பட்டால் ஈரானிய அணி முன்கூட்டியே திரும்பக்கூடும் என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
