நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

44 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டத்தில் அஸ்டன் வில்லா

லண்டன்:

கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டத்திற்கு அஸ்டன் வில்லா அணியினர் முன்னேறி உள்ளனர்.

வில்லா பார்க் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் நாட்டிங்காம் போரஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்டன் வில்லா அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அஸ்டன் வில்லா அணியின் வெற்றி கோல்களை ஒலி வாட்கின்ஸ், எமிலியானோ பியூண்டியா, பென்ஜான் மெக்கின் ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 4-1 என்ற மொத்த கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியினர் வெற்றி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து அஸ்டன் வில்லா அணியினர் 44 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பா லீக் கிண்ண
இறுதியாட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset