செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட் விலைகளை இன்ஃபான்டினோ நியாயப்படுத்துகிறார்
லாஸ் ஏஞ்சலஸ்:
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட் விலைகள், சந்தை மதிப்பு, ரசிகர்களின் அதிக தேவைக்கு ஏற்பவே உள்ளன.
பிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இவ்வாறு நியாயப்படுத்தியுள்ளார்.
இந்தப் போட்டிக்குக் கிடைத்த அமோக வரவேற்பை நிரூபிக்கும் வகையில், பிபாவுக்கு சுமார் 50 கோடி டிக்கெட் கோரிக்கைகள் வந்துள்ளது.
ஜூலை 19 அன்று நியூ ஜெர்சியில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டிக்கான சில டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் 2 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான விலைக்கு மறுவிற்பனை செய்யப்படுவதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
இரண்டாம் நிலை சந்தையில் யாராவது இறுதிப் போட்டி டிக்கெட்டுகளை 2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றால், முதலாவதாக, அந்த டிக்கெட்டின் அசல் விலை 2 மில்லியன் அமெரிக்க டாலர் என்று அர்த்தமல்ல.
இரண்டாவதாக, அதை அனைவரும் வாங்குவார்கள் என்றும் அர்த்தமில்லை.
ஆனால், யாராவது அந்த 2 மில்லியன் அமெரிக்க டாலர் டிக்கெட்டை வாங்கத் தயாராக இருந்தால், அவர்களுக்குச் சிறந்த அனுபவம் கிடைப்பதை உறுதிசெய்ய, நான் தனிப்பட்ட முறையில் ஒரு ஹாட் டாக்கையும் ஒரு குளிர்பானத்தையும் கொண்டு வருவேன் என்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மில்கன் இன்ஸ்டிடியூட் உலகளாவிய மாநாட்டில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
