செய்திகள் இந்தியா
ஊடுருவலைத் தடுக்க முதலைகளா?: எல்லைப் பாதுகாப்புப் படையின் யோசனையும் எழும் எதிர்ப்பும்
புது தில்லி:
இந்தியா, வங்கதேச எல்லைப் பகுதிகளில் ஊடுருவலையும் கடத்தலையும் தடுக்க முதலைகள், விஷப் பாம்புகளைப் பயன்படுத்தும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்தை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பரிசீலித்து வருகிறது.
சுமார் 4,096 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த எல்லையில், வேலி அமைக்க முடியாத ஆற்றுப் பகுதிகள், சதுப்பு நிலங்களில் இந்த வேட்டையாடும் விலங்குகளை ஒரு 'இயற்கை தடையாக' நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு வங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள புவியியல் ரீதியான சவால்களால், அங்கு நிரந்தர வேலிகளை அமைப்பது கடினமாக உள்ளது.
இதனால், கடந்த மார்ச் 26-ஆம் தேதி பாதுகாப்புப் படை வெளியிட்ட உள் உத்தரவின்படி, இந்தப் பகுதிகளில் ஊடுருவலைக் கட்டுப்படுத்த ஊர்வன இனங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்தத் திட்டம் மனித உரிமையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகள் ஊடுருவல்காரர்களுக்கும் அப்பாவிகளுக்கும் இடையே வித்தியாசம் பார்க்காது என்பதால், இது எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள், விவசாயிகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் இல்லாத உயிரினங்களை அங்கு கொண்டு வந்து விடுவது இயற்கை சமநிலையைப் பாதிக்கும் என்றும், வெள்ளக் காலங்களில் இந்த விஷப் பாம்புகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்துவிடும் என்றும் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எல்லைப் பாதுகாப்பு என்பது நாட்டின் முக்கியப் பிரச்சனையாக இருந்தாலும், இத்தகைய 'உயிரியல் வன்முறை' முறைகளைக் கையாள்வது அறமற்றது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, எல்லை முழுவதையும் வேலி அமைப்பதில் உள்ள நிலம் கையகப்படுத்துதல், புவியியல் சிக்கல்களைத் தீர்க்க மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
