செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் சிட்டி ஒரு புள்ளியை இழந்தது: அர்செனல் சாம்பியன் பட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி ஒரு புள்ளியை இழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹில் டிக்சன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் எவர்ட்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியுடன் சமநிலை கண்டனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் இந்த சமநிலை அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
குறிப்பாக இங்கிலாந்து பிரிமியர் லீக் பட்டத்தை வெல்ல அவ்வணி அர்செனல் அணியுடன் போராடி வருகிறது.
இந்நிலையில் இவ்வாட்டத்தில் சமநிலை கண்டதால் மென்செஸ்டர் சிட்டி அணிக்கு ஒரு புள்ளிகள் மட்டுமே வழங்கப்பட்டது.
மேலும் இரண்டு புள்ளிகளை அவ்வணி இழந்தது.
இதன் மூலம் அர்செனல் பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 16, 2026, 10:32 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமனம்
May 16, 2026, 10:27 am
