செய்திகள் இந்தியா
குடும்பத் தகராறில் எல்லை மீறிய ஆத்திரம்: பெற்ற மகள்களையே கொல்ல முயன்ற தந்தை அதிரடியாகக் கைது
பீட்:
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது இரண்டு சிறு வயது மகள்களின் மீது டீசல் ஊற்றித் தீ வைக்க முயன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஜல்கான் தாலுகாவிலுள்ள லஹமேவாடி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மகேஷ் விஷ்ணு சோமாசே என்ற நபர் மீது தற்போது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
உள்நாட்டுத் தகராறு காரணமாக சோமாசேயின் மனைவி அஷ்வினி, தனது நான்கு, ஐந்து வயதுடைய மகள்களுடன் கடந்த சில நாட்களாகத் தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
சம்பவத்தன்று அங்கு வந்த சோமாசே, தனது மனைவியை உடனடியாகத் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால், சமூகப் பெரியவர்களை வைத்துப் பேசி முடிவெடுக்கலாம் என அஷ்வினி மறுத்ததால் ஆத்திரமடைந்த சோமாசே, தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த டீசலை எடுத்து இரு மகள்கள் மீதும் ஊற்றியுள்ளார்.
அவர்களைத் தீ வைத்து எரிக்க முயன்று தீப்பெட்டியை எடுத்தபோது, அங்கிருந்த உறவினர் ஒருவர் உடனடியாகச் செயல்பட்டு அவரிடமிருந்து தீப்பெட்டியைப் பிடுங்கியுள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, இரு சிறுமிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.
அங்கிருந்தவர்களின் துரிதமான நடவடிக்கையால்தான் பிஞ்சு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இது குறித்துத் தகவல் அறிந்த போலிசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மனைவியைப் பழிவாங்கச் சொந்தப் பிள்ளைகளையே கொல்ல முயன்ற தந்தையின் இந்த மனிதாபிமானமற்ற செயல் அப்பகுதி மக்களிடையே பலத்த கண்டனங்களைப் பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகப் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
