நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழில்நுட்ப சிக்கல் காரணமாக MH8110 விமானம் மஸ்கட்டில் அவசரமாக தரையிறங்கியது

கோலாலம்பூர்: 

மலேசிய ஹஜ் பயணிகள் பயணம் செய்த KT051 (MH8110) விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலைத் தொடர்ந்து, நேற்று மாலை மஸ்கட், ஓமானில் பாதுகாப்பாக அவசரமாக தரையிறங்கியதாக தாபுங் ஹாஜி உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.11 மணிக்கு அவசரமாக தரையிறக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அந்த விமானம் எடுத்துக் கொண்டதாக தாபுங் ஹாஜி தெரிவித்துள்ளது.

"பயணிகளின் பயணம் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அவசரமாக தரையிறங்கும் நடவடிக்கை ஒரு நிலையான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

"அனைத்து 278 ஹஜ் பயணிகளும் பாதுகாப்பான நிலையில் உள்ளனர், அவர்களது குடும்பத்தினர் கவலைப்படத் தேவையில்லை" என்று அது கூறியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட விமானம் திங்கட்கிழமை மலேசிய நேரப்படி மதியம் 2.06 மணிக்கு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. மேலும், அதே நாள் மாலை 5.50 மணியளவில் ஜெட்டாவை வந்தடையும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

அமால் மலேசியா எயர்லைன்ஸ், அந்த விமானம் குறித்து அடுத்த முடிவை எடுப்பதற்கு முன், ஒரு மதிப்பீட்டை மேற்கொள்ளும் என்பதையும் தாபுங் ஹாஜி தெரிவித்துள்ளது.

"தேவைப்பட்டால், அனைத்து பயணிகளும், ஜெட்டாவிற்குத் தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன், ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள்.

"மேலதிக தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்" என்று அது கூறியுள்ளது.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாலும், அனைத்து பயணிகளின் பாதுகாப்பும் எப்போதும் முன்னுரிமையாக இருப்பதாலும், குறிப்பாக ஹஜ் பயணிகளின் குடும்பத்தினர், அமைதியாக இருக்குமாறு தாபுங் ஹாஜி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset