செய்திகள் மலேசியா
தடை செய்யப்பட்ட பட்ட நூலால் நேர்ந்த விபரீதம்
புது டெல்லி:
ஞாயிற்றுக்கிழமை, டெல்லியின் வடகிழக்கில் உள்ள உஸ்மான்பூர் பகுதியில், தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, கூர்மையான (சீன மஞ்சா) பட்டத்தின் நூலால் கழுத்து அறுப்பட்டதில், ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
ஜாக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலிஸார் தெரிவித்தனர். கண்ணாடித் துண்டுகள் பூசப்பட்ட பட்டத்தின் நூலில், பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் சிக்கி, கடுமையான காயத்தை ஏற்படுத்தியது.
பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (PTI) அறிக்கையை மேற்கோள் காட்டி, பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இருப்பினும், சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போதே அவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டதாகவும், ஒரு மூத்த போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
"சீன மஞ்சா எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும், அதன் விற்பனை, பயன்பாட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினரையும் அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார் அவர்.
கண்ணாடி அல்லது உலோகத் துண்டுகளால் பூசப்பட்ட செயற்கை நூலான 'சீன மஞ்சா'வின் பயன்பாடு, விற்பனை, சேமிப்பு ஆகியவை டெல்லியில் தடை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், இது மனித உயிர்கள், வனவிலங்குகளுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
தடை இருந்தபோதிலும், இதுபோன்ற சம்பவங்கள் அந்த நகரத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 4, 2026, 6:05 pm
இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து தடம் புரண்டது
May 4, 2026, 3:40 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியின் நிலை மறுபரிசீலனையில் உள்ளது: அமினுதீன்
May 4, 2026, 3:10 pm
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்: 'சிவப்பு நாயகர்களுக்கு' மாமன்னர் புகழாரம்
May 4, 2026, 2:44 pm
'இரண்டாவது துபாயாக' பெர்லிஸ் உருவெடுக்க முடியும்
May 4, 2026, 2:11 pm
பி15 உயிரி எரிபொருள் உற்பத்தி ஜூன் 1 முதல் தொடங்குகிறது: துணைப் பிரதமர் ஜாஹித் ஹமிடி
May 4, 2026, 12:18 pm
அரசு செலவின மறுஆய்வில் சுகாதாரம், கல்வி பாதிக்கப்படாது: பிரதமர்
May 4, 2026, 11:18 am
மாணவி கொலை வழக்கு: தம்பதிக்கு போலீஸ் ஜாமீன்
May 4, 2026, 10:38 am
