நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து தடம் புரண்டது

அலோர் காஜா: 

இன்று காலை, வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (PLUS) தெற்கு நோக்கிய 213.4 கிலோமீட்டரில், சுற்றுலா பேருந்து ஒன்று சாலையின் ஓரத்தில் தடம் புரண்டது.

காலை 10.18 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், கோலாலம்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து, பின்னர் சாலையின் ஓரத்தில் தடம் புரண்டு, வடிகாலில் சிக்கியதாக நம்பப்படுகிறது.

அவசர அழைப்பைப் பெற்றவுடன், ஒரு தீயணைப்பு வாகனமும், 10 உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக மலாக்கா மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) மண்டலம் 2 தலைவர், தீயணைப்பு கண்காணிப்பாளர் ஸுல்கைரானி ரம்லி தெரிவித்தார்.

செயல்பாட்டு வெளியீட்டுக் குழு, ஒரு உள்ளூர் ஆண் ஓட்டுநர் உட்பட இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள், மூன்று சிறுவர்கள் எட்டு இந்திய சுற்றுலாப் பயணிகள் என ஒன்பது நபர்களை இந்த விபத்து உள்ளடக்கியதாகக் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

"விபத்தின் விளைவாக, ஓட்டுநர், இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

"காயமடைந்த அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கும், எமர்ஜென்சி மெடிக்கல் ரெஸ்க்யூ சர்வீஸ் உறுப்பினர்களால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

நடவடிக்கை காலை 11.13 மணிக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset