நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்: 'சிவப்பு நாயகர்களுக்கு' மாமன்னர் புகழாரம்

கோலாலம்பூர்: 

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தை முன்னிட்டு, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், நாட்டின் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை (ஜேபிபிஎம்) பணியாளர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

தமது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில், பொதுமக்களின் பாதுகாப்பும் தேசிய நலனும் கருதி தங்கள் உயிரையே பணயம் வைத்து பணியாற்றும் ‘சிவப்பு வீரர்கள்’ எனப் போற்றப்படும் தீயணைப்பு பணியாளர்களின் சேவை, தியாகம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மன்னர் உயர்ந்த மரியாதையுடன் பாராட்டினார்.

தீ விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள், பல்வேறு அவசர நிலைமைகளில் துரிதமாக செயல்பட்டு, மீட்பு பணிகளை திறம்பட மேற்கொள்ளும் ஜேபிபிஎம்-இன் முக்கிய பங்களிப்பை மன்னர் சிறப்பித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset