நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியின் நிலை மறுபரிசீலனையில் உள்ளது: அமினுதீன்

ஷா ஆலம்: 

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவி தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, டத்தோஸ்ரீ அமினுதீன் ஹருனின் பதவி நிலை, இன்னும் விவாதத்தின் கீழ் உள்ளது என்று பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி கூறியுள்ளார்.

மாநில நிர்வாகத்தைத் தொடர்ந்து வழிநடத்த அமினுதீனுக்கு ஒப்புதல் அளித்த யாங் டி பெர்துவான் புசார், துவாங்கு முக்ரிஸ் துவாங்கு முனாவிருக்கு, பிகேஆர் நன்றியுடையதாக இருப்பதாக அமிருதீன் சினார் ஹரியன் செய்தி நிறுவனத்தின் படி கூறினார்.

இந்த விஷயம், கூட்டமைப்பு அரசியலமைப்பு, நெகிரி செம்பிலானின் பழக்கவழக்கத்திற்கு இணங்க, மறுபரிசீலனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

"இது மாநில சட்டங்கள், அரச நிறுவனங்களின் பங்கு உள்ளிட்ட பழக்கவழக்க கட்டமைப்புகளையும் உள்ளடக்கியுள்ளதால் இதை தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது.

"மந்திரி புசார் பதவியின் சட்டபூர்வமான தன்மை, மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மை ஆகியவை, அரசியலமைப்பு, பழக்கவழக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள செயல்முறைகள் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும்" என்றார் அவர்.

நிர்வாகத்தை இயக்கத்தில் வைத்திருக்க, அனைத்து தரப்பினரும் கலந்துரையாடல் மூலம் சர்ச்சையைத் தீர்க்க வேண்டும் என்று அமிருதீன் கூறினார்.

சிலாங்கூர் மாநில அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (மே 4) இங்குள்ள அரங்கம், சில்வர் ஜூபிலி ஹால், சுல்தான் அப்துல் அஜிஸ் கட்டிடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்குப் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset