நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்காசியப் பதற்றத்திற்கு மத்தியிலும் மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு: அமைச்சர் தியோங் கிங் சிங்

கோலாலம்பூர்:

மேற்கு ஆசியாவில் மோதல் நடைபெற்ற போதிலும், மலேசியாவிற்கு வருகை புரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருவதாக சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கூறியுள்ளார்.

இருப்பினும், மேற்கு ஆசிய சுற்றுலாப் பயணிகளில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

"மேற்கு ஆசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் சிறிது குறைவு உள்ளது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளைப் போலவே, மற்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதிகரித்துள்ளனர்.

"அங்கு நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்று நேற்றிரவு இங்கு நடைபெற்ற ரெயின் ரேவ் வாட்டர் மியூசிக் ஃபெஸ்டிவல் 2026-ஐ திறந்து வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த தியோங் கிங் சிங், மேற்கு ஆசியாவில் நடந்த மோதலைத் தொடர்ந்து, மக்களின் பணத்தை வீணாக்க மாட்டோம் என்று உறுதியளித்தார்.

திட்டங்களை ஏற்பாடு செய்வதற்காகச் செலவிடப்படும் அனைத்துப் பணமும், இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவே என்றார் அவர்.

"நாங்கள் திட்டங்களை ஏற்பாடு செய்யாவிட்டால், சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள். B40 குழுவினரால் வணிகம் செய்ய முடியாது, பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்த முடியும்?" என்றார் அவர்.

மேற்கு ஆசியாவில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, தனது அமைச்சு சேமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முயற்சிக்கும் என்று தியோங் கிங் சிங் தெரிவித்தார்.

"நாங்கள் சேமிக்கக்கூடியவற்றில், நாங்கள் சேமிப்போம். நாங்கள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை, நாங்கள் செயல்படுத்துவோம்" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset