நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகப்பேறுக்குப் பிந்தைய விடுப்பு அலவன்ஸ், ஒரு மாதம் வரையிலான கூடுதல் விடுப்புக்கான நிதியுதவியை அறிமுகப்படுத்த அரசு ஒப்புக்கொண்டது: பிரதமர்

புக்கிட்ஜாலில்:

மகப்பேறுக்குப் பிந்தைய விடுப்பு அலவன்ஸ், ஒரு மாதம் வரையிலான கூடுதல் விடுப்புக்கான நிதியுதவியை அறிமுகப்படுத்த  அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பெண் காப்பீடுதாரர்களின் மாத ஊதியத்தில் 80 சதவீத விகிதத்தில், மகப்பேறுக்குப் பிந்தைய விடுப்பு உதவித் தொகையை ஒரே முறை வழங்கும் அடிப்படையில் அறிமுகப்படுத்த அரசாங்கம் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டுள்ளது.

2017ஆம் ஆண்டின் வேலை வாய்ப்புக் காப்பீட்டு முறைச் சட்டத்தில் திருத்தங்களை  இந்த முயற்சி உள்ளடக்கி உள்ளது.

இதன் மூலம் 132,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும்.

98 நாள் மகப்பேறு விடுப்புக் காலம் முடிந்த பிறகு எடுக்கப்படும், மாதத்திற்கு 30 நாட்கள் வரையிலான கூடுதல் விடுப்பிற்கான நிதி உதவியே இந்த உதவித்தொகை ஆகும்.

தேசிய மடானி தொழிலாளர் என்ற கருப்பொருளில் நடைபெற்ற 2026 தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset