செய்திகள் மலேசியா
சுக் நெடுஞ்சாலையில் டோல் சாவடியை லோரி மோதியதில் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்
கோலாலம்பூர்:
சுக் நெடுஞ்சாலையில் டோல் சாவடியை லோரி மோதியதில் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நேற்று சுக் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
ராணுவ வீரர்கள் பயணித்த லோரி டோல் சாவடியில் மோதியதில், மொத்தம் 15 வீரர்கள் காயமடைந்தனர்.
புக்கிட் தெராத்தாய் டோல் சாவடியில் மாலை சுமார் 4.40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் கைருல் அனுவார் காலித் கூறினார்.
சம்பவ இடத்தில் சுங்கைபீசி முகாம் திசையிலிருந்து கோலா குபு பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆயுதப் படைகளுக்கு சொந்தமான ஒரு லோரி, டோல் சாவடிப் பகுதியில் மோதும் முன் கட்டுப்பாட்டை இழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதில் லோரியின் பின்பகுதியில் இருந்த 15 இராணுவ வீரர்களும் காயமடைந்தனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 10:16 am
மனிதாபிமானப் பணியில் முட்டுக்கட்டை: காசா உதவிக்கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்
April 30, 2026, 11:44 pm
