நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் கந்த சஷ்டி கவசப் பாராயணம் விழா; ஆயிரம் குறை சொன்னாலும் எங்களின் செயல்களும், சேவைகளும் மட்டுமே பேசும்: டத்தோ சிவக்குமார்

பத்துமலை:

ஆயிரம் குறை சொன்னாலும் எங்களின் செயல்களும், சேவைகளும் மட்டுமே பேசும்.

மஹிமா தலைவரும் டிஎஸ்கே அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

பத்துமலை திருத்தலத்தில் இன்று கந்த சஷ்டி கவசப் பாராயணம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் ஆதரவுடனும் அதன் தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா தலைமையிலும் இவ்விழா நடைபெற்றது.

மஹிமாவும் டிஎஸ்கே குழுமமும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்தது.

மே 1 தொழிலாளர் தினம் என்பதால்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதே வேளையில் வரும் காலங்களில் கந்த சஷ்டி கவசப் பாராயணம் இன்னும் விமரிசையாக நடைபெறும்.

மேலும் டிஎஸ்கே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேவாரம், சமயம், பரத நாட்டிய வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம், மஹிமா, டிஎஸ்கே என்ன செய்தது என பலர் கேள்வி எழுப்பலாம்.

பயிற்சிகளை முறையாக முடித்து சான்றிதழ் பெற்ற இம்மாணவர்கள் எங்களின் சாதனைக்கான ஆதாராம்.

ஆயிரம் குறை சொன்னாலும் எங்களின் செயல்களும், சேவைகளும் மட்டுமே பேசும் என்று  டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset