நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதாபிமானப் பணியில் முட்டுக்கட்டை: காசா உதவிக்கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்

கோலாலம்பூர்:

உள்ளூர் நேரம் இரவு 7 மணி நிலவரப்படி, தம் தம் கப்பல் இஸ்ரேலிய ஆட்சியால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த அனைத்து ஆர்வலர்களும் பாதுகாப்பான நிலையில் உள்ளனர் என சுமுட் நுசந்தரா கட்டளை மையம் (எஸ்என்சிசி) உறுதிப்படுத்தியுள்ளது.

எஸ்என்சிசி இயக்குநர் டத்தோ சனி அரபி அப்துல் அலிம் அரபி கூறுகையில், குளோபல் சுமுட் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) 2.0 என்ற மனிதாபிமானப் பணியில் ஈடுபட்ட 21 கப்பல்கள், கிரீஸ் கடல் நீரை அணுகும் போது, சுமார் 80 கடல் மைல் தொலைவில் தடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

வேறு 30 கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படாமல், தொடர்ந்து பயணம் செய்து, பாதுகாப்பாக கிரீஸ் கடல் நீரை அணுகியுள்ளதாக அவர் கூறினார்.

"தியாகோ அவிலா, சைஃப் அபுகெஷெக் ஆகியோர் ஜிஎஸ்எஃப்-இன் திசைமாற்றிக் குழுவில் உறுப்பினர்கள் ஆவார். அவர்களும், முழுப் பணியையும் முடக்கும் நோக்கத்துடனும், தடுத்து நிறுத்தப்பட்டனர்" என்று எஸ்என்சிசி-வின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, 10 மலேசியர்கள் உட்பட, மொத்தம் 175 ஆர்வலர்கள் கடத்தப்பட்டு, சியோனிச ஆட்சிக்குச் சொந்தமான கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக எஸ்என்சிசி தெரிவித்துள்ளது.

"மேலும், இந்த புவிசார் அரசியல் ஆய்வாளரான அஹ்மத் ஃபாஎசல், அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இத்தாலியின் சிசிலி துறைமுகத்தில் விலகிக் கொள்ள வேண்டியிருந்தது. அவர் பாதுகாப்பாக மலேசியா வந்து சேர்ந்துள்ளார்" என்றும் எஸ்என்சிசி தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச கடல் சட்டத்தை மீறுவதாகக் கண்டித்து, மலேசியர்களை வெளியேற்றும் செயல்முறையை எளிதாக்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் முழு ஆதரவை வெளிப்படுத்தியதாக சனி அரபி தெரிவித்தார்.

"மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்களை விரைவில் விடுவிப்பதற்கும் முயற்சிப்பதற்காக, ஐரோப்பிய நாடுகள், துருக்கி, பிராந்திய நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களைத் தொடர்புகொள்வதாக பிரதமர் தெரிவித்தார்" என்றார் அவர்.

இதற்கு முன்னர், தகவல் தொடர்பு அமைச்சர் டத்துக் ஃபாஹ்மி ஃபாட்ஸில், காசாவுக்குச் செல்லும் வழியில், சர்வதேச கடல் நீரில் இஸ்ரேலிய இராணுவத்தால் தடுக்கப்பட்ட ஜிஎஸ்எஃப் 2.0 மனிதாபிமானப் பணியில் ஈடுபட்ட 22 கப்பல்களில் ஒன்றான 'தம் தம்' கப்பல், இன்றிரவு 7 மணி நிலவரப்படி, தொடர்பு கொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார்.

அந்தக் கப்பல், அதன் தகவல்தொடர்பு கருவிகள், இயந்திரம் நாசமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset