செய்திகள் இந்தியா
ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்போருக்குப் புதிய விதிமுறைகள்: ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்
டெல்லி:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கான 'ஓ.சி.ஐ' (OCI) அட்டை விதிகளில், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மாற்றங்களை இந்திய அரசு தற்போது அமல்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிமுறைகள், உலகளாவிய சீரான கட்டண முறை, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.
குறிப்பாக, புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு (Passport) பெற்ற ஓ.சி.ஐ அட்டைதாரர்கள், மூன்று மாதங்களுக்குள் தங்களது விவரங்களைப் புதுப்பிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த 90 நாள் காலக்கெடுவைத் தவறவிடும் பட்சத்தில், 25 அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்படும். மேலும், புதுப்பிக்கப்படாத அல்லது முழுமையற்ற விவரங்களைக் கொண்ட ஓ.சி.ஐ அட்டைகளை வைத்திருப்பவர்கள் இந்திய விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம்.
இப்புதிய நடைமுறையில் உயிரியளபு (Biometric) சரிபார்ப்பு முறை வலுப்படுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் உள்ள மின்-வாயில் (E-gate) சோதனை இனி விரைவாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு முக்கியச் சலுகையாக, ஐந்தாம், ஆறாம் தலைமுறை இந்திய வம்சாவளித் தமிழர்களும் இனி ஓ.சி.ஐ அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்காக இலங்கை அரசு வழங்கிய ஆவணங்கள் போதுமான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். அத்துடன், உயர்திறன் கொண்ட வல்லுநர்கள் இந்தியாவில் ஆராய்ச்சி, கல்வித் திட்டங்களில் பங்கேற்பதற்கான விதிமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. இதற்காக முன்னர் நடைமுறையில் இருந்த ஆறு மாத காலக் குடியிருப்புத் தேவை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண விவரங்களின்படி, வெளிநாடுகளில் விண்ணப்பிக்கும் புதிய ஓ.சி.ஐ அட்டைக்கு 275 டாலர்களும், இந்தியாவில் விண்ணப்பித்தால் 15,000 ரூபாயும் வசூலிக்கப்படும்.
அட்டை தொலைந்து போனால் அல்லது சேதமடைந்தால் புதிய அட்டை பெற 100 டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சேவைகளை நவீனப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
