செய்திகள் இந்தியா
விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடூரம்: கணவர் கழிவறைக்குச் சென்ற நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்
விஜயவாடா:
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், விசாகா விரைவு ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் ரயிலின் பொதுப் பெட்டியில் (General Coach) பயணம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தங்களுக்கு ஏசி பெட்டியில் (AC Coach) இருக்கைகள் இருப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி அவர்களை அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவர்கள் ஏசி பெட்டிக்குச் சென்ற சிறிது நேரத்தில், அந்தப் பெண்ணின் கணவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். கணவர் இல்லாத அந்தச் சில நிமிடங்களைப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ரெண்டாச்சின்டாலா (Rentachintala) ரயில் நிலையத்தில் இறங்கிய பின்னரே, அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது கணவரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாகக் காவல்துறையினரை அணுகிப் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய அந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் கணவர் கண்முன்னே, ஒரு சில நிமிடங்கள் அவர் நகர்ந்த நேரத்தில் இத்தகைய கொடூரம் அரங்கேறியுள்ளது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
