செய்திகள் கலைகள்
திரையுலக ஜாம்பவான் மரியா மெனாடோ காலமானார்
கோலாலம்பூர்:
மலேசியத் திரையுலகம் இன்று நாட்டின் சிறந்த நடிகையான டத்தோஸ்ரீ மரியா மெனாடோ (இயற்பெயர் மரியா அப்துல்லாஹ்) அவர்களை இழந்துள்ளது.
மலேசியத் திரையுலகின் பொற்காலத்தை பொன்னாக வடிவமைத்த டத்தோஸ்ரீ மரியா மெனாடோ, அவர் ஒரு நடிகை மட்டுமல்ல; காலத்தின் கலைச் சின்னம், ஒரு தலைமுறையின் நினைவுக் களஞ்சியம். 1950கள் முதல் 1960களின் தொடக்க காலம் வரை, மலாய்த் திரைப்பட உலகின் மேடையில் அவர் பதித்த அடிச்சுவடு இன்னமும் அழியாத எழுத்தாகத் திகழ்கிறது.
1950கள் முதல் 1960களின் முற்பகுதி வரையிலான மலாய்த் திரைப்படத் துறையை வளப்படுத்திய பெரும் பெயர்களில் மறைந்த பழம்பெரும் நடிகை பலியாகும் ஒருவராவார் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்ஸில், தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் உருக்கமாகக் கூறியுள்ளார்.
1957 ஆம் ஆண்டு வெளிவந்த 'பொந்தியானாக்' திரைப்படத்தில் மறைந்தவரின் மிகச் சிறந்த நடிப்பு, ஒரு தனி சாரம்சத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் இன்றைய உள்ளூர் திகில் வகைத் திரைப்படங்களுக்கான பாதையையும் அமைத்துத் தந்தது என்று ஃபாஹ்மி குறிப்பிட்டார்.
"தகவல் தொடர்பு அமைச்சின் சார்பாக, மறைந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரை அறிந்த, அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறோம்.
"அவரது சேவைகளும் பங்களிப்புகளும் நீடித்த நன்மையை அளிப்பதாக அமையட்டும்.
முதுமையில் காரணமாக இன்று மதியம் 12.25 மணியளவில், இங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மையத்தில், அந்த முக்கிய நடிகை 94 வயதில் தனது இறுதி மூச்சை விட்டதாகப் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் உடல், சிலாங்கூரில் உள்ள புக்கிட் ஜெலுத்தோங்கின் இல்லத்திற்கு கொண்டு வரப்படும். பின்னர், இறுதிச் சடங்குகளுக்காக புக்கிட் டாமன்சாரா மசூதிக்கு கொண்டு செல்லப்பட்டு, புக்கிட் கியாரா இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
