செய்திகள் கலைகள்
நடிகை ருக்மணி வசந்த் அளித்த புகாரில் 3 பேரை கைது செய்த போலீசார்
பெங்களூர்:
கன்னட திரையுலகில் அறிமுகமான நடிகை ருக்மணி வசந்த், குறுகிய காலத்திலேயே தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார். ரிஷப் செட்டியுடன் நடித்த 'காந்தாரா சேப்டர் 1' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற அவர், ரசிகர்களால் 'நேஷனல் கிரஷ்' என்றும் அழைக்கப்படுகிறார்.
சமீபத்தில், ருக்மணி வசந்த் பிகினி உடையில் இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அந்தக் காட்சிகள் உண்மையானவை அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், அந்த போலி வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் ருக்மணி வசந்த் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய பெங்களூரு சைபர் கிரைம் போலீசார், ருக்மணி வசந்தின் போலி வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பரப்பியதாகக் கூறப்படும் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
