செய்திகள் கலைகள்
தாய் கிழவி திரைப்படம் வெற்றி பெற்றதற்கு பரிசாக இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்தார் சிவகார்த்திகேயன்
சென்னை:
தாய் கிழவி திரைப்படம் 100 நாள்களை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளிக்கப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மதுரை பின்னணியில் பெண்கள் சுயமுன்னேற்றம் என்பது சேமிப்பில்தான் இருக்கிறது என்கிற கருத்தை மையப்படுத்திய கதையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்தார்.
படத்தின் பெயருக்கு ஏற்ப வயதான தோற்றத்திற்கான நடை, வசன உச்சரிப்பு என அசத்தலான நடிப்பையும் ராதிகா கொடுத்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் 100 நாள்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அங்கு, இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கார் பரிசளித்தார்.
இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களிலேயே இப்படமே அதிக நாள்களைத் திரையரங்குகளில் நிறைவு செய்துள்ளது. ரூ. 92 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
