செய்திகள் கலைகள்
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
சென்னை:
இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பாக்கியராஜ் ஜூன் 27-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
அவரது திடீர் மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவரது உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்திய திரைப்பிரபலங்கள், நண்பர்களுக்கு அவரது மகன் சாந்தனு நன்றி தெரிவித்திருக்கிறார்.
விழுது மரமாகுமுன் விழுந்துவிட்ட ஆலமரமாய் என் தந்தையை இழந்த அன்று நான் பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாகவும், தடுமாறிய என் கால்களைத் தாங்கிக் கொண்ட பூமியாகவும், வெடித்து விடுமுன் எனக்காக துடித்த மாற்று இதயமாகவும் இருந்த / இருக்கின்ற / இருக்கப்போகின்ற திரையுலக ஜாம்பவான்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தவிர வேறென்ன சொல்லி என்னை நான் சமாதானபடுத்திக் கொள்ள?" என்று சாந்தனு தெரிவித்திருக்கிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
