செய்திகள் இந்தியா
கிரெடிட் கார்டு பணம் செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம்: இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள் அறிவிப்பு
புது டெல்லி:
கிரெடிட் காா்டு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த, நிா்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகு 3 நாள்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கி புதிய விதிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, கடைசி தேதி முடிந்து ஒரு நாள் தாமதமானாலும் வங்கிகள் அபராதம் வசூலித்து வருகின்றன. ஆனால் புதிய விதியின்படி, நிா்ணயிக்கப்பட்ட தேதி முடிந்து 3 நாள்கள் கடந்த பிறகே ஒரு கணக்கை நிலுவையில் உள்ள கணக்காக வங்கிகள் கருத வேண்டும்.
இந்த 3 நாள்களுக்குள் தொகையைச் செலுத்தினால், கூடுதல் அபராதக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்பதுடன், வாடிக்கையாளரின் கடன் தகுதி பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு முக்கிய மாற்றமாக, அபராதக் கட்டணத்தை கணக்கிடும் முறையில் சீா்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்த நிலுவைத் தொகையின் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி கடைசி தேதிக்கு முன்னதாக வாடிக்கையாளா் ஒரு பகுதியைச் செலுத்தியிருந்தால், மீதமுள்ள நிலுவைத் தொகைக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
