செய்திகள் இந்தியா
பாஜகவினர் மேற்கு வங்கத்தில் அட்டூழியம் புரிகின்றனர்; என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா:
பாஜக சொல்வதை தேர்தல் அதிகாரிகள் செய்வதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று (ஏப். 29) 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு இன்றுதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம், சிஆர்பிஎப் படையினர், பாஜகவினர் மீது மம்தா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
"எனது கட்சியும் நானும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் மேற்கு வங்கம் பற்றிய புரிதல் இல்லாத தேர்தல் அதிகாரிகள் பலர் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு அதிகாரி மேற்கு வங்கம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
நான் இரவு முழுவதும் கண் விழித்திருந்தேன். திரிணமூல் காங்கிரஸ் முகவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு, அவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறார். திரிணமூல் காங்கிரஸை குறிவைக்கிறார்கள். இன்று காலையில் எனது கட்சியின் இளைஞரணித் தலைவர் கைது செய்யப்பட்ட்டுள்ளார். அதனால்தான், நான் சேத்லா பகுதிக்குச் சென்றேன். நான் காவல் நிலையத்திற்குச் செல்லவில்லை. எனது கட்சித் தொண்டர் ஒருவரே அங்கு சென்றார்.
நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 'குண்டர்கள்', மன்னிக்கவும், சிஆர்பிஎஃப் படையினர், உள்ளூர் காவல்துறையினரின் அனுமதியின்றி எனது தொகுதி 70-வது வார்டு கவுன்சிலரின் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தினர். அப்போது அவரது மனைவி குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். அவர் வீட்டில் இல்லை என்று கூறியபோதும், அந்த சிஆர்பிஎஃப் படையினர் அவர்களை காலால் எட்டி உதைத்தனர். அவர்களிடமிருந்த போனையும் பறித்துக்கொண்டனர். அவர் எந்தவொரு கட்சிப் பணியிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர். இதற்கான ஆதாரத்தை என்னால் காட்ட முடியும்" என்று கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
