செய்திகள் இந்தியா
எரிபொருள் வரி விலக்கு இல்லாமல் இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடு முடங்கும் நிலையில் உள்ளது
புது டெல்லி:
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து அதிகரித்த செலவுகள் காரணமாக, விமானத் தொழில் 'செயல்பாடுகளை நிறுத்தும்' விளிம்பில் இருப்பதாக இந்திய விமானத் துறை செயல்பாடுகள் முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு விமானப் போக்குவரத்து எரிபொருளின் (ஏ.டி.ஃப்) மீதான 11 சதவீத கலால் வரியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், கூடுதலாக, உள்நாட்டு, சர்வதேச செயல்பாடுகளுக்குச் சீரான எரிபொருள் விலை நிர்ணய வழிமுறையைக் கோரியும் மனு செய்துள்ளன.
ஏ.டி.ஃப், விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளில் சுமார் 40 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளதால் இவ்விலை உயர்வு துறைக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மாதம், உள்நாட்டு விமானங்களுக்கான ஏ.டி.ஃப் விலை உயர்வை ஒரு லிட்டருக்கு 15 இந்திய ரூபாயாக (AS0.16) அரசாங்கம் கட்டுப்படுத்தியது. அதேசமயம், சர்வதேச விமானங்களுக்கான விலை ஒரு லிட்டருக்கு 73 இந்திய ரூபாயாக(AS0.77) அரசாங்கம் கட்டுப்படுத்தியது.
எனினும், இவ்வாறு வேறுபட்ட விலை நிர்ணயம் மற்றும் எரிபொருள் விலையின் தொடர்ச்சியான உயர்வு காரணமாக, விமான நிறுவனங்கள் பெரும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றன.
"...உள்நாட்டு, சர்வதேச செயல்பாடுகளுக்கு இடையிலான எந்தவொரு தற்காலிக விலை நிர்ணயமும், ஏ.டி.ஃப் விலையின் நியாயமற்ற உயர்வும், விமான நிறுவனங்கள் சமாளிக்க முடியாத பெரும் இழப்புகளைச் சுமக்கச் செய்யும். இதனால் விமானங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
"செயல்பாடுகளின் நிலைத்தன்மை, பின்னடைவு, தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, தற்போதைய சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு உடனடியாக நிதி ஆதரவை வழங்க நாங்கள் கோருகிறோம்" என்று அந்தக் கூட்டமைப்பு, குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சர்வதேச, உள்நாட்டு செயல்பாடுகள் பெரும்பாலும் இனி நிதி ரீதியாக சாத்தியமில்லாத நிலைக்கு அந்தச் சூழ்நிலை காரணமாக இருப்பதாகவும், இது ஏப்ரலில் விமானத் துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் அந்த விமான நிறுவனங்கள் கூறின.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
