செய்திகள் இந்தியா
சமையல் தகராறில் நேர்ந்த விபரீதம்: மனைவியின் அரிவாள் வீச்சில் கணவன் பலி
ஹைதராபாத்:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சங்கரப்பள்ளி பகுதியில், கோழி குழம்பு சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நபர் ஞாயிற்றுக்கிழமை அன்று கோழி குழம்பை சமைக்கும்படி தனது மனைவி லட்சுமியிடம் கூறியுள்ளார்.
ஆனால், அன்று லட்சுமி கோழி குழம்பு சமைக்காததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியைத் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். பொறுமையிழந்த லட்சுமி, அருகில் இருந்த அரிவாளை எடுத்துத் தனது கணவரை ஆவேசமாக வெட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார், தலைமறைவாக இருந்த லட்சுமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சிறு குழம்பு சமைக்காத விவகாரம், குடும்பத்தில் கொலையில் முடிந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
