செய்திகள் இந்தியா
வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த அவல நிலை: பயணிகளுக்கு இந்தியா பாதுகாப்பானதா?
புது டெல்லி:
தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு உல்லாச விடுதியில் தங்கியிருந்த போது, ஒரு அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், அந்த நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, வாஷிங்டனைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர், குட்டா கிராமத்தில் உள்ள ஒரு உல்லாச விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அவருக்கு போதை மயக்க மருந்து கலந்த பானம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்திய போலிஸார், விசாரணைக்கு உதவும் வகையில் முக்கிய குற்றவாளியாக நம்பப்படும் ஒரு சமையல்காரர் மற்றும் சம்பந்தப்பட்ட உல்லாச விடுதியின் உரிமையாளரைத் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
அந்த உரிமையாளர், பாதிக்கப்பட்டவரின் WiFi அணுகலை மூன்று நாட்களுக்குத் துண்டித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறார். உதவி பெறுவதையோ அல்லது அந்தச் சம்பவத்தைப் புகாரளிப்பதையோ தடுப்பதற்காக இவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணையில், வளாக உரிமையாளர் பாதிக்கப்பட்டவரின் தகவல்தொடர்புகளைக் கட்டுப்படுத்த முயன்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் அந்த இடத்தை விட்டு வெளியேற முடிந்ததாகத் தெரிகிறது.
சம்பவத்திற்குப் பின்னர், அந்தப் பெண் உடனடியாக அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொண்டார். பின்னர், மேலதிக நடவடிக்கைக்காக தகவல் உள்ளூர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளார்.
இந்த வழக்கு தற்போது மேலதிக விசாரணையில் உள்ளது. இதற்கிடையில், இரண்டு சந்தேக நபர்களும் மே 3 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
